நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்: நிர்வாகம் தகவல்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் என நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தத்தால் 465 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. கூடங்குளத்தின் 2-வது அணு உலையில் தற்போது 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Related Stories: