×

மது டோர்டெலிவரி அனுமதி கோரியவருக்கு அபராதம்

மதுரை: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மனமகிழ் மன்றத்தலைவர் முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டாக்கில் உள்ள மதுபானங்களை மன்ற உறுப்பினர்களுக்கு ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதி கேட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட வேண்டியதில்லை என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 


Tags : Alcohol Door Delivery Permit , Wine, Door Delivery, Fines
× RELATED மீறினால் 2 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் கேரளாவில் ஓராண்டுக்கு மாஸ்க் கட்டாயம்