×

6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன? மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:   பிரதமராக மோடி பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை பாஜவினர் கொண்டாடுகின்றனர்.  கடந்த 6 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது சாதனைகளா, வேதனைகளா என்பதை ஆய்வு செய்தால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லா திண்டாண்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியல் ஆய்வக நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2016 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 சதவிகிதம் பாஜவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆறு தேசிய கட்சிகளுக்கு மொத்தம் வழங்கப்பட்ட நன்கொடையான 985 கோடியில், பாஜவிற்கு மட்டும் 915 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 6  ஆண்டுகால பாஜ ஆட்சியில் படுபாதாளத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சாவும் நாளுக்கு நாள் பலமடங்கு கூடி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் வளர்த்து வருகிறது.  மோடி ஆட்சி மீது மக்கள் கடும் வேதனையில் உள்ளதை எவரும் மறுக்க இயலாது. எனவே, ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி. இதை மக்களிடையே பரப்புரை செய்வது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் கடமையாகும்.Tags : reign ,Modi ,KS Alagiri What ,KS Alagiri , 6 Years of Reign, People, Prime Minister Modi, KS Alagiri
× RELATED நாடே ஸ்தம்பிக்கும் நேரத்தில் ஓர்...