பொதுப்பணித்துறை அதிரடி பொறியாளர்கள் 100 பேர் திடீர் பணியிட மாற்றம்

சென்னை:  தமிழக பொதுப்பணித் துறையில் வழக்கமான பொது பணியிட மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது  3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் 100க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் ஹேமலதா கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கும், ஈரோடு உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் திருப்பூர் மருத்துவ கோட்டத்துக்கும், பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் திருச்சி கட்டுமான பிரிவு கோட்டத்துக்கும், பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முருகேசன் நாகப்பட்டினம் மருத்துவ கட்டுமான கோட்டத்துக்கு என 100 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

இதில் தற்போது திருப்பூர், நாகை, நீலகிரி விருதுநகர், ராமநாதபுரம், ஊட்டி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உட்பட 13 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியை கண்காணிக்கவும், பணியை விரைந்து முடிக்கும் வகையில் கூடுதல் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: