பைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்

புதுடெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வர டெல்லியில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அதன் விமானிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் மதியம் அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன் அவர்களை பரிசோதித்த குழு விமானிகளின் சோதனை அறிக்கையை சரியாக பரிசோதிக்கவில்லை. இரண்டு மூத்த அதிகாரிகள் அவற்றை சரி பார்த்த போது விமானிகளில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Related Stories: