×

சில்லி பாயின்ட்…

* இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிக்க எம்.எஸ்.டோனியிடம் இன்னும் நிறைய திறமை மிச்சம் இருக்கிறது என்று பிசிசிஐ முன்னாள் பொருளாளர் அநிருத் சவுத்ரி கூறியுள்ளார்.
* உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் டாப் 100 பட்டியலில், இந்தியா சார்பில் விராத் கோஹ்லி 66வது இடம் பிடித்துள்ளார். டாப் 100ல் உள்ள ஒரே கிரிக்கெட் வீரரும் அவர் தான். டென்னிஸ் நட்சத்திரம் பெடரர் 5வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
*ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடரை இந்த ஆண்டு ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தலைவர் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
* வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இல்லாமல், பூட்டிய ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெறும்.
* வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
* வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை தற்காலிகமாக பாதியாகக் குறைக்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
* டி வில்லியர்ஸ் தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த பீல்டர் என்று சக தென் ஆப்ரிக்க நட்சத்திரம் ஜான்டி ரோட்ஸ் பாராட்டி உள்ளார்.
* வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் டி20 தொடரை நடத்துவது சாத்தியம் இல்லை என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் இணை உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

Tags : Anirudh Chaudhry ,BCCI , Anirudh Chaudhry, former treasurer of BCCI
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்