நண்பர்களை சந்திப்பேன்!

இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நிலைமை கட்டுக்குள் இருப்பதால் ஜூன்-1 முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பொது இடங்களில் 6 பேர் வரை ஒன்றாக சேர்ந்து சந்திக்கலாம் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் 8 பேர் வரை குழுவாக பொது இடங்களில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் எப்போதும் உற்சாகமாக வலம் வரும் கிரிக்கெட் நட்சத்திரம் கெவின் பீட்டர்சன் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ‘கொரோனாவால் ஏற்பட்ட இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. திங்கட்கிழமை முதல் நண்பர்களை, உறவினர்களை சந்திப்பேன்’ என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: