×

‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்து விட்டார் என அமெரிக்காவில் சர்ச்சை கிளம்பிய நிலையில், அவர் சீனா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், இந்த பெரும் தொற்றிலிருந்து உலகை எச்சரிக்க வேண்டிய உலக சுகாதார அமைப்பு முழு தோல்வி அடைந்து விட்டதாகவும், அது சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் அடுக்கடுக்கான புகார்களை ஏவினார். இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்தது. அரசியல் ஆதாயத்துக்காக கொரோனாவை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என டிரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்க முறித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘உலக சுகாதார அமைப்பு சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை தவறாக வழிநடத்தி உள்ளது. அவர்கள் தேவைப்படும் பெரிய சீர்த்திருத்தங்களை செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான உறவை நாங்கள் முறித்துக் கொள்கிறோம். அதற்கு செலவிடப்படும் நிதி, உலகெங்கிலும் பொது சுகாதார தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். கொரோனா குறித்து சீனா உலகிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மையைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என கூறி உள்ளார்.Tags : US ,World Health Organization , World Health Organization, USA, Corona, Denald Trump,
× RELATED கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு...