நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு? வெட்டுக்கிளிய கொத்தித் தின்ன சீன வாத்து படைய கூப்பிடுங்க!

புதுடெல்லி: இந்தியா தற்போது கொரோனாவுக்கு எதிராக மட்டுமல்ல, லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுக்கிளிக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் புகுந்துள்ளன. தற்போது இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பரவி இருக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர். வெட்டுக்கிளிகளை அழிக்க டிரோன் மூலமாகவும் தீயணைப்பு மூலமாகவும் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆனாலும், இதுபோன்ற இயந்திரத்தனமான நடவடிக்கைகளை காட்டிலும், வெட்டுக்கிளிகளை அழிக்க இயற்கையே வழி ஏற்படுத்தி தந்துள்ளதை சீனா தான் முதலில் கண்டுபிடித்தது. சீனாவில் கடந்த 2018ல் இதே போல் வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்திய போது, மற்ற நாடுகளை போல இயந்திரங்களை நம்பாமல் தனது பயோலாஜிக்கல் ஆயுதமாக வாத்துக்களை களமிறக்கியது.

சுமார் 7 லட்சம் வாத்துகள், கோழிகள் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது நல்ல பலனை தந்தது. அவை வெட்டுக்கிளிகளை தின்று தீர்த்தன. வாத்து படை வந்ததால், வெட்டுக்கிளிகள் துண்டை காணோம் துணியைக் காணோம் என சீனாவை விட்டு காலி செய்தன.தற்போது இதே பாணி யை இந்தியாவும் பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு, அதை அழிக்க பல யுக்திைய கையாண்டு வருகிறது. மழைக்காலத்திற்குள் வெட்டுக்கிளிகளை விரட்டாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என ஏற்கனவே இந்த அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே சீனாவிலிருந்து வாத்து படையை களமிறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நம்மூர் வாத்துகளை வைத்து ஆய்வு நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* சீன வாத்து ஒருநாளைக்கு 400 வெட்டுக் கிளிகளை ருசிக்குமாம்.

* சீன கோழி ஒரு நாளைக்கு 200 வெட்டுக்கிளிகளை தின்று விடும்.

* கடந்தண்டு பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் நுழைந்த போது, சீனா ஒரு லட்சம் வாத்து படையை அனுப்பி காப்பாற்றியது.

Related Stories: