தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா: சென்னையில் 616 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இதுதான் உயர்ந்த பட்சமாகும். மேலும், பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் 616 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 12,605 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 616 பேருக்கும், செங்கல்பட்டு 94 பேருக்கும், கடலூர் 5, கள்ளக்குறிச்சி 2, காஞ்சிபுரம் 22, கன்னியாகுமரி 4, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கும், மதுரையில் 10 பேருக்கும், நாகப்பட்டினம் 3, சேலம் 23, தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர் 28, திருவண்ணாமலை 9, திருவாரூர் 4, தூத்துக்குடி 15, நெல்லை 3, திருச்சி 5 என 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைப்போன்று வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த அதாவது குவைத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், சண்டிகர், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும், ெடல்லியில் இருந்து வந்த 2 பேருக்கும், சாலை வழியாக வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் ஆந்திரா, அசாம், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் தலா ஒருவருக்கும், குஜராத் 6, மகாராஷ்டிரா 46, மேற்கு வங்காளம் 12, ஜார்க்கண்ட், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 2 பேர் என 82 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை21,184 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 687 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் 9,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வந்த சென்னையை சேர்ந்த 54 வயது ஆண், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த 69 வயது ஆண், 58 வயது ஆண், 37 வயது பெண், 70 வயது ஆண், 72 வயது பெண் என சென்னையை சேர்ந்த 6 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 599 ஆண்கள், 338 பெண்கள், 1 திருநங்கை ஆகும். அதன்படி தமிழகத்தில் இதுவரை 13,336 ஆண்கள், 7,842 பெண்கள், 6 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனிமையில் இருந்தவர்களில்195 பேருக்கு கொரோனா

ரயில்களில் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டிருந்த 10,232 பேரில் 9,607 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், 6,576 பேருக்கு தொற்று இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,836 சோதனை மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

வெளிநாடு, மாநிலத்தை சேர்ந்த 1,176 பேருக்கு தொற்று

தமிழகத்திற்கு பல்வேறு வழிகளில் சர்வதேச விமானம் மூலம் வந்த 2,716 பேரில் 89 பேருக்கும், உள்நாட்டு விமானம் மூலம் வந்த 7,856 பேரில் 15 பேருக்கும், ரயில் மூலம் வந்த 10,222 பேரில் 195 பேருக்கும், சாலை மார்க்கமாக சொந்த வாகனங்களில் வந்த 47,811 பேர் மற்றும் பேருந்தில் வந்த 24,827 பேரில் 1,176 பேருக்கு என மொத்தம் தமிழகத்திற்கு வந்த 93,482 பேரில் 1,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: