×

பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பாடத்திட்டம் ஆய்வு செய்ய குழு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி, : ‘‘பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் அதற்கேற்ப பாட  திட்டங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய  குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  ஈரோடு மாவட்டம்  கோபியில்  பள்ளி கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு  முடிவுகள் ஜூலை மாதம்  வெளியிடப்படும். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி திறப்பது குறித்து  முதலமைச்சர் தலைமையிலான குழுதான் முடிவு செய்யும். ஆண்டுதோறும் 210 நாட்கள் பள்ளி வேலை நாளாக இருந்த  நிலையில் தற்போது வேலை  நாட்கள் குறையும். எனவே பாட திட்டங்களை  குறைப்பது குறித்து ஆய்வு செய்ய  குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒரு  மாத காலத்தில் தங்கள் அறிக்கையை அளித்த பின் பாடங்கள் குறைப்பது குறித்து   முடிவெடுக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Tags : Committee ,Sengottaiyan ,Minister Sengottaiyan , School workdays, curriculum review, Minister Sengottaiyan
× RELATED ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது;...