×

புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுவை முதல்வர் நாராயணசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தனது டிவிட்டர் பக்கத்திலும் அவரது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் : புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதை அதிகம் கொண்ட அவர் மாநில சுயாட்சி - சமூகநீதி - மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி தனது லட்சியத்தில் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.


Tags : MK Stalin ,Mud Stalin ,Birthday ,Narayanasamy ,Puducherry ,Puthuvai ,Narayanaswamy , Happy Birthday of Puthuvai CM Narayanasamy, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...