திண்டுக்கல்லில் மினிஸ்டர் விழாவில் இடைவெளி ‘மிஸ்சிங்’ : ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு

திண்டுக்கல்:  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்ட நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில், சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், ஒய்எம்ஆர் பட்டியில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு 1,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, மைதா மாவு, சேமியா, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரணப்பையை வழங்கினார். இங்கு அரசின் உத்தரவை மீறும் வகையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டிருந்தது.

நிவாரண பொருட்களை வாங்க வந்தவர்கள் ஒருவருடன், ஒருவர் இடித்துக்கொண்டு நெருக்கமாக நின்றனர். மேலும் நிகழ்ச்சி காலை 10 மணியளவில் நடப்பதாக தெரிவித்திருந்தனர். பொதுமக்கள் காலை 9 மணிக்கே குவிய துவங்கினர். ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மணிநேரம் தாமதமாக காலை 11 மணிக்குத்தான் வந்தார். இதனால் பொதுமக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீசாரும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.

Related Stories: