×

விவசாயி அடித்து கொலை

சென்னை: மேல்மருவத்தூர் அருகே உள்ள கிளியாநகர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (55). விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள் மோகன்ராஜ் (29). இவரது தம்பி முகேஷ் (25). நேற்று முன்தினம் இரவு மோகன் ராஜ், முகேஷ் ஆகியோர், அந்த பகுதியில் குப்பைஎரித்ததால் பிரபாகரன் வீட்டுக்கு புகை சென்றது. பிரபாகரனுக்கு ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், புகை காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரபாகரன்  குடும்பத்தினர் தட்டிக்கேட்டபோது, அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் சரமாரி தாக்கி கொண்டனர். அதில் பிரபாகரன் படுகாயமடைந்தார். பின்னர், மோகன்ராஜ், முகேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பினர்.

இதையடுத்து படுகாயமடைந்த பிரபாகரனை உடனடியாக உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவா், பரிதாபமாக இறந்தார். புகாரின்படி, மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், முகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Farmer beat, killed
× RELATED இயற்கை முறையில் பந்தல் அமைத்து காய்கனிகள் பயிரிடும் விவசாயி