கொரோனாவில் உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி பீர் குடித்து கொண்டாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த 103 வயது மூதாட்டி ஒருவர் பீர் குடித்துக் கொண்டாடினார். அமெரிக்காவின் மஸ்ஸாசுசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜென்னி ஸ்டெஜ்னா என்பவர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். முதியவர்களை அதிகம் பாதிக்கும் கொரோனா வைரஸ், 100 வயது கடந்த இந்த மூதாட்டியின் உயிரைப் பறித்துவிடும் என்றே மருத்துவர்கள் நினைத்தனர். அதற்கேற்ப மூதாட்டியின் உடல்நிலையும் மோசமடைந்து கொண்டே சென்றது. அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால், மூதாட்டியின் உறவினர்களுக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர்.

Advertising
Advertising

பின்னர் மூதாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால், அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், கொரோனா தொற்றில் இருந்து அதிசயமாக மீண்டார். அவர் முழுவதும் உடல்நலம் பெற்றதால் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மூதாட்டியின் பேத்தி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திகைத்தனர். மேலும், கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டி, தனக்குப் பிடித்த பீர் பானத்தை குடித்துக் கொண்டாடினார். இந்தச் சம்பவம் மூதாட்டியின் உறவினர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. கொரோனாவில் உயிர் தப்பித்த மூதாட்டி பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: