ஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாக வழக்குகள் விசாரிக்கப்படும். பிற்பகல் 2.30 மணி முதல் 4.45 மணி வரை இருதரப்பும் விருப்பம் தெரிவித்தால் காணொலியில் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தமிழ்ச்செல்வி அறிவித்துள்ளார்.

Related Stories: