×

மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 7,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது, மேலும் தளர்வுகளை அறிவிப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இந்நிலையில் மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஐந்தாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பொது ஊரடங்கு ஜூன் 15-ந்தேதி வரை மத்திய பிரதேசம் மாநிலத்தில் நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் சவுகான் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

Tags : Madhya Pradesh ,Punjab , Madhya Pradesh, Punjab, Curfew
× RELATED மகா காளேஸ்வரர் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து