கொரோனாவுக்காக நிரந்தர ஊரடங்கில் இருக்க முடியாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா பாதிப்புக்காக நிரந்தர ஊரடங்கில் இருக்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் அதிக பாதிப்பில் 3வது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு இதுவரை 17,386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 398 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே 4ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் (மே 30) முடிவடையவுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். அப்போது; டெல்லியில் கொரோனா பாதித்த மொத்த நோயாளிகளில் 2,100 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரும்பாலான மக்கள் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் ஒரு வாரத்திற்குள் 9,500 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது. டெல்லியில் கொரோனா பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதற்காக யாரும் பீதியடைய வேண்டாம். இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை இருந்தாலோ டெல்லியின் நிலைமை பற்றி கவலைப்பட வேண்டும். நிரந்தர ஊரடங்கால் எந்த தீர்வும் இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: