×

சாதி, மத, இனவெறி எப்போது மாயும்? கருப்பின தொழிலாளி கொல்லப்படுவது காட்டுமிராண்டித்தனம் : தொல்.திருமாவளவன் வேதனை!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீசாரால், கருப்பின தொழிலாளி ஒருவர் முட்டிக்காலால் கழுத்தில் அழுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் என்ற நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின காவலாளியை வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஒருவர் தனது முட்டிக்காலால் கழுத்தில்  அழுத்தி  கொன்ற  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வைரலானது. அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் போல் நடந்த இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்த சம்பவத்தை கண்டித்து மினசோட்டா மாகாணத்தில் நேற்று முன்தினம் போராட்டமும், வன்முறையும் வெடித்தது. இந்த நிலையில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்கா வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் ஜார்ஜ்ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கறுப்பர் என்பதால். அவரது கழுத்தைக் காவல்துறையினர் முழங்கால்களால் அழுத்தியே கொன்றனர். இது இனவெறிப் படுகொலையென மக்கள் கொதிக்கின்றனர். கொரோனா துயரத்திலும் இனவெறிக் கொடூரம். இந்த சாதி, மத, இனவெறி எப்போது மாயும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்படுவது காட்டுமிராண்டித்தனம். I cant breath- என்னால் மூச்சுவிட முடியல என்று கடைசியாய் கதறியிருக்கிறார் அவர். வெள்ளை காவல் அதிகாரிகள் ஈவிரக்கமின்றி முழங்கால்களால் அழுத்திக் குரூரமாய்க் கொன்றுள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags : Thol.Thirumavalavan , Caste, religion, racism, black labor, barbarism, throat
× RELATED ராமநாதபுரம் அருகே போலியான சாதி...