×

ஜி 7 உச்சி மாநாட்டுக்கு டிரம்ப் அழைப்பு: நிராகரித்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்

வாஷிங்டன்: ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அழைப்புக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நன்றி தெரிவித்ததாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

எனினும் தற்போதைய கொரோனா பேரிடர் நிலவரத்தை கருத்தில் கொண்டு வாஷிங்டனுக்கு பயணம் செய்து மாநாட்டில் நேரடியாக பங்கேற்க இயலாது என மெர்க்கல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜி-7 மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்திருந்தார்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற ஜூன் 10 முதல் 12 வரை அமெரிக்காவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநாடு நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Angela Merkel ,summit ,G7 ,German , G7 Summit, Trump Calling, Rejected, German Prime Minister
× RELATED அமெரிக்கா மற்றும் உலகின் பிற...