×

தாம்பரத்தில் வடமாநில இளம் தம்பதி தற்கொலை; ஊரடங்கால் வேலை கிடைக்காமல் அவதி: வறுமை காரணமாக தற்கொலை என தகவல்

சென்னை: சென்னை அருகே வடமாநில இளம் தம்பதி வறுமை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுக்கு பல்வேறு தனியார் அமைப்புகளும் நிவாரணம் வழங்கி உதவி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. பொது முடக்கத்தான் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனிடையே தாம்பரம் அடுத்த மப்பேட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த இருவருக்கும் ஊரடங்கினால் வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லாமல் தவித்த இவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கல் சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்த போலீசார் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த இவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்ததால் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவருடன் தங்கியிருந்த பெண் இவரது மனைவியா அல்லது பெண் நண்பரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.


Tags : suicide ,poverty Suicide ,Northland , Tambaram, North State Young Couple, Suicide, Poverty
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை