×

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டுகளை காட்டி ரூ. 50,000 வரை கடன் பெறலாம்; அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை; சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்த்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஊரடகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர்அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்களுக்கு அத்தியாவசிய தேவையாக வங்கிகளின் கடனுதவி உள்ளது.

பொதுத்துறை வங்கி அதிகாரிகள், அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம். ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை வங்கிகள் வழங்க வேண்டும்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும் என்றும் விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். விவசாயிகள், சுய உதவிக்குழு, சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு கடன் உதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களுக்கு உதவ முதல்வர் பழனிசாமி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பொது மக்களுக்கு வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, “முதலமைச்சர் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி  எளிமையாக்கப்பட்டுள்ளது. ரூ. 50,000 வரை யார் வேண்டுமாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம்.

Tags : Selur Raju ,show ration cards ,Cooperative Banks ,Tamil Nadu ,banks , Tamil Nadu, Co-operative Bank, Ration Card, Minister Selur Raju
× RELATED அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு...