குழந்தைகளை அச்சுறுத்தும் தெரு நாய்கள் தொல்லை நீங்குமா?

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் நகரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. சுற்று வட்டாரத்தில் கிராமப் பொதுமக்கள் அனைவரும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆர்.எஸ்.மங்கலம் தான் வரவேண்டும். இங்கு ஏராளமான தெரு நாய்கள் தெருக்களிலும், ரோடுகளிலும் சுற்றி திரிந்து அங்கும் இங்குமாக ஒடுவதால் குழந்தைகள் முதியவர்கள், குறிப்பாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் சைக்கிளில் செல்லும் போது நாய்கள் துரத்துகின்றது. இதனால் பல நேரங்களில் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. ஆகையினால் இந்த நாய்களின் உரிமையாளர்களே யார் என்று தெரியாமல் உள்ளது.

நாய் கடித்தால் மிகவும் அவதிப்பட நேரிடும். ஆகையால் நாய்களை ஒழிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியது, வீடுகளில் வளர்க்கும் நாய்கள் வீட்டுக்கு காவலன் தான். ஆனால் டவுன் முழுவதும் எராளமானநாய்கள் கும்பல் கும்பலாக திரிவதால், பிள்ளைகளை வெளியில் விளையாட விடக் கூட அச்சமாக உள்ளது. ஒரு சில நாய்கள் நோயுற்று திரிகின்றது. இவை பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்கள்.

Related Stories: