சித்தரேவு - பெரும்பாறை இடையே மலைப்பாதையில் கிடக்கும் கற்களால் விபத்து அபாயம்

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு - பெரும்பாறை மலைச்சாலை 15 கி.மீட்டர் தூரமுள்ளதாகும். ஆபத்தான பள்ளத்தாக்குகளும், வளைவுகளும் நிறைந்த மலைச்சாலையாகும். இந்த குறுகிய ரோட்டை அகலப்படுத்த பல ஆண்டுகாலமாக விடுத்த கோரிக்கையின் பேரில். கடந்த ஆண்டு சித்தரேவு - புல்லாவெளி இடையே உள்ள 12 கி.மீ தூரமுள்ள மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இந்த ரோடு ரூ.6 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பணி நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.தற்போது இந்த ரோட்டில் மலைத்தோட்டங்களில் விளைந்த காபி, மிளகு, சவ்சவ், மலைவாழை போன்றவற்றை விவசாயிகள் வாகனங்களில் கீழ்பகுதியில் உள்ள வத்தலக்குண்டு, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல வாகனங்களில் வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ரோட்டில் விரிவாக்கத்திற்காக 2 மாதங்களுக்கு முன்பு ரோட்டின் விளிம்பில் சிமெண்ட் சாலை போடப்பட்டது. அத்துடன் வாகனங்கள் சென்றால் சேதம் ஏற்படாமல் இருக்க ரோட்டின் நடுவில் கற்களை நெடுஞ்சாலைத் துறையினர் அடுக்கி வைத்தனர். ஆனால், தற்போது இந்த கற்கள் அகற்றப்படாமல் உள்ளதால் இந்த ரோட்டில் வரும் விவசாயிகளில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆபத்தான கற்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், மலைத்தோட்ட விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: