மகாராஷ்டிராவில் பாதிப்பு 62,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு; 4971 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்   இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 7964 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 265 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது. கொரோனாவால்  இதுவரை 4971 பேர் உயிரிழந்த நிலையில், 82,370 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2098 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 26,997 பேர்  குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது  இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 20,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11,313 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 17,386 பேருக்கு தொற்று உறுதி   செய்யப்பட்டுள்ளது. அங்கு, 398 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7846 பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1024 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 125 பேர் குணமடைந்தது.

பீகாரில் 3376 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 1211 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 289 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 189 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 415 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 100 பேர் குணமடைந்தது.

கோவாவில் 69 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 41 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 15,934 பேருக்கு பாதிப்பு; 980 பேர் பலி; 8611 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 1721 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 940 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 251 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 171 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1150 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 565 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 8365 பேருக்கு பாதிப்பு; 184 பேர் பலி; 5244 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 511 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 216 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 74 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 8 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 27 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 1723 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 887 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 51 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2197 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 1949 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 716 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 102 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 2781 பேருக்கு பாதிப்பு; 48 பேர் பலி; 894 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2164 பேருக்கு பாதிப்பு; 28 பேர் பலி; 875 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 2425 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 1381 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 4813 பேருக்கு பாதிப்பு; 302 பேர் பலி; 1775 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 7284 பேருக்கு பாதிப்பு; 198 பேர் பலி; 4244 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 3436 பேருக்கு பாதிப்பு; 60 பேர் பலி; 2226 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 3 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 7645 பேருக்கு பாதிப்பு; 334 பேர் பலி; 4269 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 295 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 87 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: