×

பிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அருகே மதுபோதையில் சினிமா தியேட்டரை சூறையாடிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலையில் அனகாபுத்தூர் பகுதியில் சினிமா தியேட்டர் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாதங்களாக இந்த தியேட்டர் மூடிக்கிடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மது போதையில் அங்கு வந்த 3 பேர், தங்களுக்கு பிரத்யோகமாக சினிமா போட்டுக்காட்ட வேண்டும், என்று அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.  அதற்கு பணியாளர்கள் மறுத்ததால், ஆத்திரமடைந்த மூவரும், அங்கிருந்த கற்களை எடுத்து சினிமா தியேட்டர் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், அந்த மூவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அனகாபுத்தூரை சேர்ந்த அருண் (20),  பார்த்தீபன் (19)  மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற இருவரைபுழல் சிறையிலும் அடைத்தனர்.

Tags : movie theater , Exclusive scene, movie theater looms, boy, 3 arrested
× RELATED ஏரியில் மூழ்கி சிறுவன் பலி: திருவள்ளூர் அருகே சோகம்