×

கொரோனாவுக்கு சிறைத்துறை அதிகாரி பலி

சென்னை: கோடம்பாக்கம் பி.காலனியை சேர்ந்த 54 வயது நபர், எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கிளார்க்காக வேலை செய்து வந்தார். பின்னர், கடந்த 7 ஆண்டுகளாக புழல் சிறையில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். கடந்த 28ம் தேதி இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவம்: தி.நகர்  லலிதாபுரத்தில் உள்ள ஆயுஷ் மருந்தகத்தில்  ஒப்பந்த அடிப்படையில்  மருத்துவராக பணியாற்றி வந்தவர் அப்ரோஷ் பாஷா (42). இவர், சென்னை மாநகராட்சி 10வது மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால், அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி காலை மூச்சுத் திணறல்  மற்றும் மாரடைப்பால் அவர் இறந்தார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை அறிக்கை அளித்து  அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Coroner ,prison officer ,Coroner Kills , Corona, prison officer, kills
× RELATED கொரோனாவால் வறுமை பழநியில் தவில் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை