×

பலத்த காயங்களுடன் சடலம் மீட்பு,..டியூசன் மாஸ்டர் அடித்து கொலை? போலீசார் விசாரணை

சென்னை: மந்தைவெளி அம்மணி அம்மாள் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (66). முதுகலை பட்டதாரியான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்,  வீட்டிலேயே 20 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதில் வரும் வருமானதில் வாழ்க்கை நடத்தி வந்தார்.  செங்கல்பட்டில் வசித்து வரும் இவரது தங்கை ராஜலட்சுமி அடிக்கடி இங்கு நேரில் வந்து பார்த்தும்,  செல்போனில் பேசி வருவதும் வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே மாதவன் முடங்கி கிடந்தார். கடந்த 26ம் தேதி முதல் மாதவனிடம் இருந்து எந்த செல்போன் அழைப்பும் ராஜலட்சுமிக்கு வரவில்லை.

இதனால்  சந்தேகமடைந்த அவர், தனது மகன் வெங்கட்டை சென்னை மந்தைவெளிக்கு நேற்று அனுப்பியுள்ளார். அதன்படி, அவர் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை பூட்டை  உள்ளே சென்று பார்த்த போது, மாதவன் அழுகிய நிலையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.  சடலத்தை கைப்பற்றிய போலீசார், அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Wounds Police ,Deusen ,Beaten , Serious injuries, corpse, deusen master, murder, cops
× RELATED ஆண் சடலம் மீட்பு