×

நிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்

சென்னை: நிலத்தகராறில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், எடுத்த லாரி டிரைவரின் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதனால், திருக்கழுக்கன்றம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த  இரும்புலி கிராமம்  சொக்கம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (42). கன்டெய்னர் லாரி டிரைவர். அரிகிருஷ்ணனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்  கண்ணன் (35). அவரது சகோதரர் கன்னியப்பன் ஆகியோருக்கு இடையே வீட்டுமனை சம்பந்தமாக தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சகோதரர்கள் 2 பேரும், அரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மனமுடைந்த அவர், வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், அரிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், சில வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘கண்ணனும், கன்னியப்பனும் எங்களது இடத்தை அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு அனைவரும் துணையாக உள்ளனர். இதனால் அவர்களை எதிர்க்க, என்னால் முடியவில்லை. என் சாவுக்கு பிறகாவது காவல்துறையும், நீதித்துறையும் உரிய நீதி வழங்க வேண்டும். என் சாவுக்கு காரணம் கண்ணனும், கன்னியப்பனும்தான் என அந்த வீடியோக்கள் நீள்கிறது. இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lorry driver ,suicide ,landlord , Suicide, Lorry Driver, Videos, Social Networks
× RELATED தொடரும் அநாகரிக வீடியோக்கள் எதிரொலி: டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை