×

வட சென்னை பகுதியில் 285 பேருக்கு கொரோனா தொற்று

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை, திருவிக நகர், திருவொற்றியூர் மண்டலங்களில் நேற்று 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதன்படி, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கொத்தவால்சாவடி கோவிந்தப்பன் தெருவில் ஒரே குடும்பத்தில் 3 பேர், சீனிவாசா அய்யர் தெருவில் 2 பேர், மின்ட் தெருவில் ஒருவர், வரதமுத்தையா தெருவில் ஒருவர், கந்தப்பசெட்டி தெருவில் ஒருவர், அண்ணா பிள்ளை தெருவில் ஒருவர், மண்ணடியில் 3 பேர், முத்தியால்பேட்டையில் 3 பேர் உள்ளிட்ட 123 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகர், கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், புதுவண்ணாரப்பேட்டை, வஉசி நகர், காசிமேடு, வியாசர்பாடி, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட  புளியந்தோப்பு  கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி, கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர், ஓட்டேரி நியூ பேரன்ஸ்  சாலையை சேர்ந்த 48 வயது மாநகராட்சி ஊழியர், செம்பியம் காமராஜர்  நகர் 2வது தெருவில் உள்ள வங்கி மேலாளர், தலைமை செயலக காவலர் குடியிருப்பு சுப்புராயன் 5 வது  தெருவில் 35 வயது பெண், பராக்கா தெருவில் 56 வயது வருமானவரித்துறை அலுவலர்,   எஸ்எஸ்புரம் பகுதியை சேர்ந்த 37 வயது  நபர், செகரிட்ரியேட்  காலனியை சேர்ந்த 27 வயது நபர், திடீர்  நகரை சேர்ந்த 39 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று   ஏற்பட்டுள்ளது.

திருவிக நகர் சாந்தி காலனியை  சேர்ந்த 31 வயது சுகாதார ஆய்வாளர் மற்றும் பேப்பர் மில்ஸ் ரோடு,  நாகம்மாள் 1வது தெரு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என நேற்று ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் 26 வயது உதவி பொறியாளர் உட்பட 35 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவி பொறியாளருக்கு அறிகுறிகள் ஏதுமில்லாததால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

தாம்பரத்தில் 10 பேர் பாதிப்பு
தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியரான கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த 28 வயது வாலிபர், அவரது மனைவி, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவன ஊழியரான இரும்புலியூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 36 வயது வாலிபர், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர், திருநீர்மலை சாலையில் உள்ள வெல்டிங் கடை ஊழியர்கள், கிழக்கு தாம்பரம் மோதிலால் நகரில் 2 வாலிபர்கள், கிழக்கு தாம்பரம், திருவள்ளுவர் நகரில் அரிசி கடையில் பொருட்கள் வாங்கிய 28 வயது பெண் உட்பட 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.

Tags : North Chennai Coronavirus ,Chennai , Coronavirus ,North Chennai
× RELATED டெல்லியில் மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி