×

ஜுன் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில் இயக்க அனுமதி: ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை: ஜுன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் 4 சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜுன் 1ம் தேதி மாநிலங்களுக்கு இடையில் 200 சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தவிர்த்து தமிழகத்தில் மாநிலங்களுக்கு இடையில் சிறப்பு ரயில் இயக்கவும் தெற்கு ரயில்வே சார்பில் ரயில் வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.  இதன்படி கோவை - மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர்த்து), ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (  மதுரை - விழுப்புரம் - மதுரை), இன்டெர்சிட்டி சூப்பர் பாஸ்ட்   (திருச்சி - நாகர்கோயில் -திருச்சி), கோவை  சூப்பர் பாஸ்ட்  (கோவை -காட்பாடி -கோவை ) உள்ளிட் நான்கு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்பு பதிவு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags : Railway Board , Districts, 4 Special Railway, Railway Board
× RELATED ரயில்களுக்கான அட்டவணையில் மாற்றம்;...