கொரோனா பலியை மறைப்பதா? முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  ராஜிவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா கொரானா வைரஸ் நோய் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். இவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் மருத்துவக் குறிப்பேட்டில் ‘கொரானா’ நோயுக்கு சிகிச்சை அளித்ததை ஆதாரப்பூர்வ குறித்துள்ளனர். இந்த நிலையில் தலைமை செவிலியர் பிரிசில்லா கொரானா தாக்குதலால் மரணமடையவில்லை என்று கூறுவது நம்பத்தகுந்த தகவல் அல்ல. இது தொடர்பாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது.

 இதே போல் மருத்துவர் அப்பிராஸ் பாஷா (யுனானி) மறைவுக்கும் கொரானா நோய் தொற்று காரணமல்ல என தெரிவிப்பது நம்பத்தகுந்த செய்தி அல்ல. கொேரானா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தபடி தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர் ஆகியோர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: