×

வரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என்பதால் விவசாயிகளும் குறுவை சாகுபடி செய்ய மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டு சுமார் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.இதன் மூலம் கடந்த காலங்களில் விவசாயிகள் விவசாயத் தொழிலால் அடைந்த பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து ஓரளவுக்கு மீள முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி முழுமையாகப் பயனளிக்க வேண்டும். எனவே தமிழக விவசாயிகளுக்கு இப்போதைக்கு மிக முக்கிய தேவையாக இருப்பது மேட்டூர் அணையின் நீர் என்பதால் நீர்நிலைகளை விரைவாக தூர்வார  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,GK Vasan ,opening ,Mettur ,Muttur , Mettur, Water Opening, Improvement Works, GK Vasan
× RELATED வேளாண் பணிகளில் ஊரக வேலை உறுதி திட்ட...