அந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்

அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர், ஆப்பக்கூடல், வேம்பம்பத்தி, வெள்ளாளபாளையம், முனியப்பம்பாளையம், சென்னிமலைக்கவுண்டன்புதூர், கீழ்வாணி, பிரம்மதேசம், அத்தாணி, சவண்டப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு  பலத்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், ‌கூத்தம்பூண்டியில் 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி வரை பலத்த சூறாவளி காற்று வீசியது. ஆலாம்பாளையம் கிராமத்தில் கோழிப்பண்ணை அடியோடு சாய்ந்து தரைமட்டமானது.

Advertising
Advertising

Related Stories: