×

சேலத்தில் மிரட்டி பலாத்காரம் செய்து 4 பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கைதானவருக்கு கொரோனா

* கண்ணீர் விட்டு கதறி அழுத பெண் போலீசார்
* உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்பட 30 பேர் தனிமை

சேலம்: சேலத்தில் 4 பெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து உதவி கமிஷனர்,  2 இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் தாதகாபட்டி சீரங்கன் 4-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35).  இவர், லோகநாதன் அழகு நிலையம் நடத்தி வந்தார். ஆனால், இங்கு விபசார தொழில் நடந்ததாகவும், எங்களை நிர்வாணம் படமெடுத்து மிரட்டுகின்றனர் என்று பாதிக்கப்பட்ட 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், லோகநாதன், அவரது கூட்டாளிகள் சிவா (36), பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவான லோகநாதன் மனைவி ரூபாவை தேடி வருகின்றனர். இந்நிலையில் கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு நேற்று காலை வந்தது. அதில் லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவரை கைது செய்து வந்த பெண் போலீசார் கண்ணீர் விட்டு அழுதனர். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, அதிகாலையில் தான் வீட்டிற்கு சென்றதாகவும், குழந்தைகளுடன் இருந்ததாகவும் கூறி கண்கலங்கினர்.

மகளிர் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் சென்றிருந்தனர். கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேனிலும், மகளிர் போலீஸ் ஸ்டேனிலும் 3பேரையும் வைத்திருந்தனர். இப்பணியில் உதவி கமிஷனர் ஈஸ்வரன், மகளிர் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், டவுன் இன்ஸ்பெக்டர் குமார், கிச்சிப்பாளையம் எஸ்.ஐ. சத்தியமூர்த்தி, அன்னதானப்பட்டி எஸ்.ஐ. முரளி, கொண்டலாம்பட்டி எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் உள்பட 30 போலீசார் ஈடுபட்டனர்.

தற்போது இவர்கள் அனைவரும் கருப்பூர்  அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 போலீஸ் ஸ்டேசனிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உள்ளே யாரும் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதான லோகநாதன் உள்பட 3 பேரையும் போலீசார் ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர். இதனால், சிறை அதிகாரிகள் உள்பட 81 கைதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சிறை முழுவதும் கிருமி நாசினிதெளிக்கப்பட்டுள்ளது.


Tags : Salem ,Corona , Salem, rapist, 4 girls, nude picture, corona
× RELATED சேலத்தில் உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில்...