×

அண்ணா பல்கலை துணைவேந்தரின் உதவியாளருக்கு கொரோனா

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் இல்லம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. இவரிடம் உதவியாளராக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சூரப்பா மற்றும் குடும்பத்தினருக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.  உதவியாளருக்கு  தொற்று உறுதியான நிலையில்  துணைவேந்தரோடு தொடர்பில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இதேபோன்று சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தேர்வுதுறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இயக்குனர் அலுவலகம் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தேர்வு துறை ஊழியர்கள் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Tags : Corona ,Anna University ,Vice President's Assistant ,Vice President ,Assistant , Anna University Vice-Chancellor, Corona
× RELATED அண்ணா பல்கலை., பிரதான நுழைவு வாயிலில் வர மாநகராட்சி ஊழியர்களுக்கு தடை