அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் மரணம்: தமிழக அரசின் மோசமான செயல்பாட்டுக்கு சாட்சி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது.

என்ன நடந்ததோ, அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தது. கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்புப்பணியில் போராடி வரும் மருத்துவத் துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா என டிடிவி. தினகரன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: