×

சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மறைவு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல் நலக்குறைவால் காலமானார். சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவியேற்றவர் அஜித் ஜோகி (74). கடந்த 2000ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர். 2016ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.  உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த 9ம் தேதி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பிற்பகல் 3.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Ajit Jogi ,Chief Minister ,Chhattisgarh ,death , Former Chhattisgarh Chief Minister Ajit Jogi, death
× RELATED சொல்லிட்டாங்க...