பிரதிஷ்டை தின பூஜை சபரிமலை நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: பிரதிஷ்டை  தின பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (31ம் தேதி)  திறக்கப்படுகிறது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு  வருடந்தோறும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருட  பிரதிஷ்டை தினம் ஜூன் 1ம் தேதியாகும். இதையொட்டி நாளை மாலை 5 மணி அளவில்  சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர்  முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை  நடத்துவார்.

நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. ஜூன் 1ம் தேதி  அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் உள்பட வழக்கமான  பூஜைகள் நடைபெறும். பின்னர், அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு அரிவராசனம்  பாடி கோயில் நடை சாத்தப்படும். பொது முடக்கம் அமலில் இருப்பதால்  இம்முறையும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. ஆனால்,  ஆன்லைன் மூலம் பக்தர்கள் பூஜைகள் நடத்தலாம். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக  சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  ஜூன் 14ம் தேதி திறக்கப்படும்.

Related Stories: