×

சில்லி பாயின்ட்…

*  செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த பாஸ்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயம் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஆண்கள் உலக கோப்பை டி20 போட்டித் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த முடிவை ஜூன் 10ம் தேதி வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தள்ளிப்போட்டுள்ளது.
*  ஆகஸ்ட் 1ம் தேதி வரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
*  இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் பிரதமர் நலநிதியாக திரட்டப்பட்ட 2 கோடி ரூபாய்க்கான காசோலை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் நேற்று வழங்கப்பட்டது.
* இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனும் 800 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளருமான ருடிஷா டேவிட் (கென்யா), கணுக்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக 4 மாதம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
*  பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை பொதுவான ஒரே மைதானத்தில் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் முழுமையான கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என்று லண்டன் போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர்.
* டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என மிக உறுதியாக விரும்புகிறேன். ஆனால், அது அத்தனை எளிதல்ல என்பதையும் உணர்ந்திருக்கிறேன்… என்று வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.
* 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதாக ஒருபோதும் கூறவில்லை என்று ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
* கேப்டன் இயான் மோர்கன், வேகப் பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர் உட்பட முன்னணி வீரர்கள் 55 பேர் உடனடியாக மைதானங்களில் பயிற்சியை தொடங்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
* தனது சமூக வலைத்தள பக்கங்களில் விஷமிகள் ஊடுருவி தவறான தகவல்களைப் பதிந்துள்ளதால் ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து மீடியாவில் இருந்தும் வெளியேறுவதாக பாகிஸ்தான் அணி முன்னாள் வேகம் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
* ஆக்லாந்தில் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் அடுத்த ஆண்டு ஜனவரி 18-14 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2016ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மே 29ம் தேதி நடந்த பைனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தினத்தின் மலரும் நினைவுகளை சன்ரைசர்ஸ் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளது.
*  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உயர் செயல்பாட்டு பயிற்சி இயக்குனர்களாக முன்னாள் ஸ்பின்னர் ஷக்லைன் முஷ்டாக், பீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிராட்பர்ன் நியமிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Boston Marathon , The Boston Marathon
× RELATED மனித உரிமைகள் பிரச்சனை காரணமாக...