மீண்டும் ஆடுகளம் திரும்பும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள்

லண்டன்: கொரோனா தொற்று பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகள் மீண்டும் ஆடுகளம் திரும்புகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் சற்று தணிந்துள்ள நிலையில், ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் போட்டிகளை நடத்த பல்வேறு நாடுகளின் அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இம்மாதம் முதல் வாரத்தில் பயிற்சிகள் செய்ய அனுமதிக்கப்பட்டது.ஐரோப்பிய கண்டத்தில் முதல் கால்பந்து போட்டியாக ஜெர்மனியில் பண்டெஸ்லிகா தொடர் மே 17ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்க உள்ளது.

இத்தொடரில் இன்னும் 12 சுற்று போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் ஜூவெண்டஸ் அணி அதிக புள்ளிகளுடன்  முதலிடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்தில் இங்லிஷ் பிரீமியர் லீக் ஜூன் 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 92 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. பிரெஞ்ச் லீக் கால்பந்து தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்காமலேயே முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.  முதலிடத்தில் இருந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்பெயினில் நடக்கும் லாலிகா சாம்பியன்ஷிப் தொடரின் 2020-21 சீசன் செப். 12ம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: