துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நக்சலை காக்க ரத்தம் கொடுத்த போலீசார்: ஜார்க்கண்டில் மனிதாபிமானம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நக்சலைட்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரத்த தானம் செய்து சிஆர்பிஎப் வீர‍ர்கள் உதவி உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சிங்பும் மாவட்டத்தில் மான்மாரு-தெபோ வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக சிஆர்பிஎப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதியை அவர்கள் சுற்றிவளைத்தனர். அங்கு, போலீசாருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் சில நக்சலைட்கள் குண்டடிப்பட்டு காயமடைந்தனர்.

சிஆர்பிஎப் தரப்பில் எவ்வித சேதமும் இல்லை. காயமடைந்து பிடிப்பட்ட நக்சல்களில் மனோஜ் ஹேசா என்பவருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைக்க ரத்தம் தேவை என்று டாடா மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே, சிஆர்பிஎப் காவலர்கள் ஓம் பிரகாஷ் யாதவ், சந்தீப் குமார் ரத்தம் கொடுத்து உதவினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்துபவர்கள் என்பது தெரியும். நாங்களும் அவர்களுக்கு எதிரான சண்டையில் துப்பாக்கிச்சூடு நடத்துவோம். ஆனால், இதையெல்லாம் மீறி மனிதாபிமானம் என்ற ஒன்று உள்ளது. அதன் அடிப்படையிலேயே அவருக்கு ரத்த தானம் செய்து உதவினோம்,’’ என்றனர்.

Related Stories: