×

தொடர் கொள்ளை; 2 பேர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து 6 லட்சம், 5 சவரன் நகை கொள்ளைபோயிருந்தது.  இதேபோல், ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பத்திரிகை அலுவலகத்தில் பூட்டை உடைத்து கேமரா மற்றும் கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிபாண்டியன் (37),  முருகன் (50)  ஆகியோரை கைது செய்தனர். 


Tags : robbery , Serial robbery, 2 arrested
× RELATED ஆவியின் கனி - 2 சந்தோஷம்