×

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்; ஏர் இந்தியா அறிவிப்பு

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. நியூசிலாந்து, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக இந்தியாவில் விமான சேவைகள் முடக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது, இந்த ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளதால் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து, அமெரிக்கா தென் அமெரிக்க ஜெர்மனி உள்ளிட்ட நதிகளுக்கு கூடுதல் விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்டும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதற்குமுன் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது டெல்லி, மும்பை நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு 8  சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து ஜூன் நான்காம் தேதி ஆக்லாந்துக்கும், ஜூன் ஐந்தாம் தேதி சிகாகோ, ஸ்டாக்கோம் நகரங்களுக்கும் விமானங்களை இயக்குகிறது. ஜூன் ஆறாம் தேதி நியூயார்க், பிராங்க்பர்ட், சியோல் நகரங்களுக்கும் விமானங்களை இயக்க உள்ளது. மும்பையில் இருந்து ஜூன் ஆறாம் தேதி லண்டனுக்கும், நியூ ஆர்க்குக்கும் விமானங்களை இயக்குகிறது. இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை பகல் 11 மணிக்குத் தொடங்குகிறது. ஏர் இந்தியா இணையத்தளத்திலும் அலுவலகங்களிலும் பயணச்சீட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : flights ,Air India ,Indians ,Announcement , Overseas, Indians, Flights, Air India
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து