அந்தமானில் இருந்து நாளை கப்பலில் 163 பேர் சென்னை வருகை

சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், ஊர்களில் சிக்கிக் கொண்டவர்களை விமானம், ரயில், பஸ், கப்பல் மூலம் மத்திய, மாநில அரசுகள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்து வருகின்றன.  இந்நிலையில் அந்தமானில் சிக்கி கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப சென்னைக்கு சிறப்பு கப்பல் இயக்கப்படும் என்று கடந்த மே 1ம் தேதி அந்தமான் நிர்வாகம் அறிவித்தது.

இதன்படி ஊரடங்கு காரணமாக அந்தமானில் சிக்கி கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 163 பேர் சென்னை வருகின்றனர். 26ம் தேதி போர்ட் பிளேயர் துறைமுகத்தில் பயணத்தை தொடங்கிய இந்த கப்பல் இன்று அல்லது நாளை காலை சென்னை துறைமுகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தனிமைப்படுத்த மூன்று வகையான மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 2500, 1200,  800 என்று மூன்று வகையாக கட்டண தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இலவச தனிமைப்படுத்தும் மையங்களும் உள்ளன.

Related Stories: