×

ஆதார் போதும்; உடனே பான் எண் கிடைக்கும்

புதுடெல்லி: ஆதார் அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வசதி, பரிசோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி துவக்கப்பட்டது. இதில், இதுவரை 6,77,680 பான் எண்கள் 10 நிமிடங்களில்  வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ஆதாருக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம், ஆதார் எண் மற்றும்  அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும். ஆன்லைனில்  எளிதாக விண்ணப்பிக்கலாம். உடனே மின்னணு ஆதார் கார்டை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.  கடந்த 25ம் தேதி வரை  மொத்தம் 50.52 கோடி பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 32.17 கோடி பான் எண்கள் ஆதாருடன்  இணைக்கப்பட்டுள்ளன.  ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : PAN , Aadhaar,AN number
× RELATED உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,583,932 ஆக உயர்வு