×

சில்லி பாயின்ட்…

* கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள ஆஸி. வீரர் வார்னர், குடும்பத்தினருடன் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டமாக பொழுதைக் கழித்து வருகிறார். சமீபத்திய ட்வீட்டில் அவர் பாகுபலி வேடம் அணிந்து போஸ் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
* ஜூன் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமில் வீரர்கள் பங்கேற்பது கட்டாயம் இல்லை என இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
*  தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை சுயமாகத் தீர்மானிக்கும் உரிமை டோனிக்கு உள்ளது. அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.
* கோவாவில் நடைபெற இருந்த தேசிய விளையாட்டு போட்டித் தொடர் (அக். 20  நவ. 4) காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Warner , Warner,bahubali
× RELATED சில்லி பாயின்ட்…