மாதவிடாய் என்பது அவமானம் அல்ல: மத்திய அமைச்சர் ஸ்மிருதி கருத்து

புதுடெல்லி: ‘பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் என்பது அவமானமான ஒரு விஷயம் இல்லை,’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதி உலக மாதவிடாய் சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அனைத்து ஜன் அவுசாதி கேந்தராக்களிலும் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கின்றன. இதன் மூலமாக, பல லட்சம் இந்திய பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் உறுதி செய்யப்படுகிறது. மாதவிடாய் என்பது வெட்ககேடான விஷயமில்லை என்பது குறித்து பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; இருபாலருக்கும் கற்பித்தல் அவசியமாகும்,’ என்று கூறியுள்ளார்.

இதேபோல், தேசிய மகளிர் ஆணை தலைவர் ரேகா சர்மா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒரு பெண்ணின் உயிரியல் சுழற்சி என்பது, அவரது வாய்ப்புக்களுக்கான வழியில் ஒருபோதும் தடையாக மாறக்கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பான மாதவிடாய்க்கு உரிமை உள்ளது பாதுகாப்பான சுகாதாரமான மாதவிடாய் அணுகல் என்பது ஒரு உரிமையாகும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: