வனத்துறை அதிகாரிகள் 2 பேரை தாக்கிய சிறுத்தை சாவு: மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

திருமலை: தெலங்கானாவின் ராஜிபேட்டா தாண்டாவில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் வனவிலங்குகள் வராமல் இருக்க முள்வேலி அமைத்து வலை விரித்து வைத்திருந்தார். இந்த வலையில் நேற்று சிறுத்தை ஒன்று சிக்கிக்கொண்டது. இதனை பார்த்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் முள்வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்க முயன்றனர். அப்போது திடீரென வலையில் இருந்து வெளியே வந்த சிறுத்தை வனத்துறை அதிகாரிகள் 2 பேரை தூரத்தி சென்று தாக்கி தப்பியோடியது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். தொடர்ந்து, சிறுத்தையை ஐதராபாத் கொண்டு செல்லும் வழியில் இறந்தது.

Related Stories: