×

மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து நல்லபாம்பால் இருமுறை கடிக்க வைத்தார்: கணவரிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் பத்தனம்திட்டா அருகே அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் (29). இவரது  மனைவி உத்ரா (25). தம்பதிக்கு ஒரு மகன் உண்டு.  உத்ராவை கணவர் வீட்டில் வைத்து கடந்த மார்ச் 2ம் தேதி பாம்பு கடித்தது. உடல் நலம் தேறிய பிறகு  அவர் தாய் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த மே  7ம் தேதி தந்தை வீட்டில் வைத்து உத்ராவை மீண்டும் பாம்பு கடித்து இறந்தார்.   இதையடுத்து சூரஜ், பாம்பு விற்ற சுரேஷ் ஆகிய 2 பேரை போலீசார்  கைது  செய்தனர். விசாரணையில் கிடைத்த விவரம்:
முதல் முறை மார்ச் 2ம் தேதி கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க  வைத்துள்ளார். அப்போது  பாயாசத்தில் தூக்க மாத்திரையும், பாரசிட்டமால் மாத்திரையும்  கொடுத்துள்ளார். உத்ரா தூங்கிய பிறகு  பாம்பை விட்டு கடிக்க வைத்துள்ளார்.

வலி தாங்காமல்  அலறிய உத்ராவை மீட்ட குடும்பத்தினர் மருத் துமவனை க்கு  அழைத்து சென்று பிழைக்க வைத் தனர். 2வது  முறையாக மே 6ம்  தேதி சூரஜ் பழச்சாறு தயாரித்து தூக்க  மாத்திரை கலந்து உத்ராவுக்கு கொடுத்துள்ளார். இரவில் அவர் தூங்கிய பின்னர் பாம்பை இடதுகையில் 2 முைற கடிக்க வைத்து கொன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.Tags : Wife, sleeping pill, goodbye, husband, trying to murder
× RELATED ஜோலார்பேட்டையில் கணவனை கொன்ற மனைவி கைது